search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடபழனி முருகன் கோவில்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம், அகண்ட பஜன் நடைபெற உள்ளது.

    சென்னை, வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடக்கிறது.

    ஆடி முதல் வெள்ளிக் கிழமையான நாளை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புடவை சாத்தி மஞ்சக்காப்பு அலங்காரம் நடக்கிறது. பின்னர் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஞ்சக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், 6.30மணிக்கு சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 7 மணிக்கு கலைமாமணி பாரதி திருமகன் குழுவினர் வழங்கும் வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கிறது.

    3-வது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 5-ந் தேதி மாலை, உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

    இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் மற்றும் பூஜை முடிந்ததும் சுமங்கலி பெண்களுக்கு அம்மன் பிரசாதமாக மாங்கல்யம் வழங்கப்படுகிறது.

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம், அகண்ட பஜன் நடைபெற உள்ளது.

    • 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது.
    • 12-ந் தேதி மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    வடபழனியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    கோவிலில் இருந்து புறப்பட்ட தேரோட்டம் மேற்கு மாட வீதி, வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு மாட வீதி, பழனி ஆண்டவர் கோவில் தெரு, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, நூறடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று பின்னர் மீண்டும் வடபழனி கோவிலை வந்தடைந்தது.

    தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். செண்டை மேளம், சிவவாத்தியங்கள் இசைக்கப்பட்டது. தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.

    இன்று இரவு 7மணிக்கு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. 11-ந் தேதி இரவு 7மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நடக்கிறது, 12-ந் தேதி காலை 9மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் வீதி உலாவும், 10மணிக்கு தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 6மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகன புறப்பாடு நடைபெறுகிறது.

    வருகிற 13-ந் தேதி சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதி உலா நடைபெறுகிறது. 14-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினமும் மாலை 6.30மணிக்கு பரதநாட்டியம், இசைகச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    தேரோட்ட விழாவையொட்டி வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 15-ந்தேதி நடக்கிறது.
    முருகன் கோவில்களிலேயே பழமை வாய்ந்த தென்பழனியில் பழனியாண்டியாகவும், சென்னை வடபழனியில் வடபழனி ஆண்டவராகவும் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா நடந்து வருகிறது. சென்னை, வடபழனி ஆண்டவர் கோவில் என்று அழைக்கப்படும் வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாகம் விடையாற்றி பெருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து வரும் 29-ந்தேதி வரை நடக்கும் விழாவில் மங்களகிரி விமானம், சூரியபிரபை, சந்திரபிரபை, ஆட்டுக்கிடா, நாகம், யானை, குதிரை, மயில் வாகனங்கள் மற்றும் புஷ்ப பல்லக்கில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சண்முகர் காலை 7 மணி மற்றும் இரவு 7 மணிக்கு வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 15-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. 17-ந்தேதி இரவு 7 மணிக்கு வடபழனி ஆண்டவர் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 18-ந்தேதி வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் வீதி உலாவும், தீர்த்தவாரி கலசாபிஷேகமும் நடக்கிறது.

    அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் 19-ந்தேதி இரவு 7 மணிக்கு சிறப்பு புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது.

    வருகிற 20-ந்தேதியில் இருந்து 29-ந்தேதி வரை விடையாற்றி திருவிழா நடக்கிறது. இதனையொட்டி தினசரி கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. குறிப்பாக தினசரி மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தெய்வீக பாடல், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இதில் முதல் நாள் அதாவது 20-ந்தேதி இரவு 7 மணிக்கு வீரமணி ராஜூவின் தெய்வீக பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், உதவி ஆணையர் கே.சித்ராதேவி ஆகியோர் செய்து வருகின்றனர்.
    ×